Homeசமூகம்பேரா மாநில ரீதியிலான வளர் தமிழ் விழா: ஒட்டுமொத்த வெற்றியாளராக கோலகங்சார் மாவட்டம் தேர்வு!

பேரா மாநில ரீதியிலான வளர் தமிழ் விழா: ஒட்டுமொத்த வெற்றியாளராக கோலகங்சார் மாவட்டம் தேர்வு!

சுங்கை சிப்புட், ஜூலை 14-

இவ்வாண்டின் பேரா மாநில ரீதியிலான வளர்தமிழ் விழா சுங்கை சிப்புட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் ஏற்பாட்டில் ஈவுட் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற இப்போட்டிகளில் மொத்தம்
72 மாணவர்கள் பங்கு பெற்றனர்.

இவர்கள் திருக்குறள் ஒப்புவித்தல் , பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவற்றில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

இவற்றில், கவிதை ஒப்புவித்தல் போட்டியில் சங்காட் தமிழ்ப்பள்ளி மாணவன் சிவநேஸ்வர் சதீசன் முதலிடத்தை வென்றார்.

இரண்டாவது இடத்தை காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி மாணவன் ஜெயராமன் ஐயப்பன் , மூன்றாவது இடத்தை சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி மாணவி லீனிதா கணேசன், நான்காவது இடத்தை சிலிம் ரிவர் தமிழ்ப் பள்ளி மாணவி அனுஷா பிரகாஷ் , ஐந்தாவது இடத்தை ஈவுட் தமிழ்ப்பள்ளி மாணவி பிறை நிலா லிவின்ரன் ஆகியோர் வென்றனர்.

தொடர்ந்து, திறக்குறல் ஒப்புவித்தல் போட்டியில் சிலிம் ரிவர் தமிழ்ப் பள்ளி மாணவி ஹாரி சாந்தினி ராஜன் முதல் நிலையிலும் , மகா கணேச வித்தியசாலை தமிழ்ப்பள்ளியைச் சேரந்த மாணவி திவானி சற்குணன் இரண்டாவது நிலையிலும் , கிளேபாங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் சேரன் ராஜ் கணேசன் மூன்றாவது நிலையிலும். வால்புரோக் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவி நவானி காளியப்பன்,
நான்காவது நிலையிலும், சென் மேரி தமிழ்ப்பள்ளி மாணவன் துர்வன் குமரன் ஐந்தாவது நிலையிலும் வாகை சூடினர்.

அடுத்து, பேச்சுப் போட்டியில் ஈவுட் தமிழ்ப்பள்ளி மாணவி சுபா நாகஸ்ரீ நாகரான் முதல் நிலையிலும் , குரோ தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த சஜித்தா கணேசன் இரண்டாவது நிலையிலும் , சென் திரேசா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த தமிழினி ராஜேந்திர சோழன் மூன்றாவது நிலையிலும் , மகிழம்பூ தமிழ்ப்பள்ளி மாணவி புனிதமலர் நான்காவது இடத்திலும் , துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி மாணவன் ரிஷன் ராஜ் ஐந்தாவது நிலையிலும் வெற்றி பெற்றனர்.

இப்போட்டிகளை பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர கழகம் கடந்த 24 ஆண்டு காலமாக வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

அவ்வகையில் இம்மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களும் சூழல் முறையில் மாநில ரீதியிலான வளர்தமிழ் விழாவை நடத்தி வருகிறது.

இவ்வாண்டு கோலகங்சார் மற்றும் உலு பேராக் மாவட்டத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் இதனை நடத்தியது.

இப்போட்டியின் ஒட்டுமொத்த வெற்றியாளர் இடத்தை கோலகங்சார் மாவட்டம் தட்டிச் சென்றது.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் நிகழ்விற்கு சிறப்பு வருகை புரிந்த சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் சுப்பிரமணியம் பரிசுகளை வழங்கினார்.

சுங்கை சிப்புட்டில் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள எட்டு தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்குத் தாம் தொடர்ந்து உதவிகள் புரிந்து வருவதாக நிகழ்ச்சியில் உரையாற்றியபோது கேசவன் குறிப்பிட்டார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கள் தாய்மொழி கல்வியில் சிறந்து விளங்குவதற்கு ஏதுவாக இந்தப் போட்டிகளை ஆண்டு தோறும் தாங்கள் நடத்தி வருவதாக பேரா மாநில வளர்தமிழ் விழா 2024 ஆண்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஆந்திரகாந்தி கண்ணையா வரவேற்புரை ஆற்றுகையில் குறிப்பிட்டார்.

இப்போட்டிகளில் முதல் நிலை மற்றும் இரண்டாவது நிலையில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஆகஸ்ட் மாதம் நெகிரி செம்பிலானில் தேசிய நிலையில் நடைபெறவிருக்கும் போட்டியில் பங்கேற்பர் என்று பேரா மாநில தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத் தலைவர் பழனி சுப்பையா இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more