Homeசமூகம்கம்பனின் ஒவ்வொரு பாடலும் காவியம்! -லண்டன் விழாவில் டத்தோஸ்ரீ சரவணன் சிறப்புரை

கம்பனின் ஒவ்வொரு பாடலும் காவியம்! -லண்டன் விழாவில் டத்தோஸ்ரீ சரவணன் சிறப்புரை

லண்டன், ஜூலை 14-

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு பாத்திரமும் வெறும் கதையல்ல, காவியம் என்று லண்டன் கம்பன் விழாவில் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் இலக்கிய உரையாற்றினார்.

“பன்னிரண்டாம் நூற்றாண்டில் கவிச்சக்கரவர்த்தி கம்பனால் உருவான கம்பராமாயணம் இன்றும் உலகெங்கும் முழங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு பாத்திரமும் வெறும் கதையல்ல காப்பியம்” என்றார் மஇகா தேசிய துணைத் தலைவரான சரவணன்.

காலமெனும் ஆழியிலும்
காற்றுமழை ஊழியிலும்
சாகாது கம்பனவன் பாட்டு – அது
தலைமுறைக்கு எழுதிவைத்த சீட்டு.

லண்டன் ‘அறிவு அறக்கட்டளையின்’ ஏற்பாட்டில் நடைபெறும் கம்பன் விழாவில் சிறப்புரையாற்றியதில் மட்டற்ற மகிழ்ச்சியடைவதாக அவர் குறிப்பிட்டார்.

10 ஆயிரம் கவிதைகளை முத்தாக எழுதி வைத்த கம்பனை ஆராதிக்க இந்த ஒரு பிறவி போதுமா என்று தெரியவில்லை. ஊனாய் உயிராய் உணர்வாய் என்னுள் நிறைந்திருக்கும் கம்பன் அடி போற்றி என்று கம்பனின் புகழ்பாடி அரங்கம் நிறைந்த பேராளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

spot_img

latest articles

explore more