Homeசமூகம்லண்டன் கம்பன் விழாவில்டத்தோ ஸ்ரீ எம்.சரவணனுக்கு "செந்தமிழ்ச் செல்வர்" விருது!

லண்டன் கம்பன் விழாவில்டத்தோ ஸ்ரீ எம்.சரவணனுக்கு “செந்தமிழ்ச் செல்வர்” விருது!

லண்டன், ஜூலை 15-
லண்டன் அறிவு அறக்கட்டளை ஏற்பாட்டில் நடைபெற்ற கம்பன் விழாவில் மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் “செந்தமிழ்ச் செல்வர்” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

இரு தினங்கள் நடைபெற்ற இவ்விழாவில் டத்தோஸ்ரீ சரவணன் பேருரை ஆற்றி பன்னாட்டுப் பேராளர்களைக் கவர்ந்தார்.

கவிச்சக்ரவர்த்தி கம்பனின் புகழை அழகிய தமிழில் இவர் எடுத்துரைத்த பாணி அரங்கில் அமர்ந்திருந்த அனைவருக்கும் ஓர் இலக்கிய விருந்தாக அமைந்தது என்றால் மிகையாகா.

இத்தகைய சிறப்புக்குரிய டத்தோஸ்ரீ சரவணனுக்கு லண்டன் அறிவு அறக்கட்டளை இவ்விழாவில் “செந்தமிழ்ச் செல்வர்” விருது வழங்கி கெளரவித்தது.

spot_img

latest articles

explore more