
கோலாலம்பூர், ஜூலை 16-
அண்டைய நாடான சிங்கப்பூரிலிருந்து ஆங்கில மொழி ஆசிரியர்களை நாட்டிற்குள் தருவிப்பது மீதான பரிந்துரை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்ததாகத் தெரிகிறது.
இந்தப் பரிந்துரை தொடர்பில் கல்வி அமைச்சு மேற்கொண்டிருக்கும் சிறப்பு திட்டங்கள் குறித்து கல்வி அமைச்சரிடம் சபாக் பெர்ணம் நாடாளுமன்ற உறுப்பினர் கலாம் சலாம் வினவியதாக நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் மீதான இணைய அகப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே வேளையில், உள்நாட்டு ஆசிரியர்களின் ஆங்கில மொழி திறனை
மேம்படுத்துவதற்கு கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி நேரத்தின் போது அவர் வினவினார்.
-பெர்னாமா


