Homeசமூகம்இணைய பகடிவதைக்கு தீர்வு காண சிறப்பு செயற்குழு! -அமைச்சர் ஃபாமி ஃ பாட்சில்

இணைய பகடிவதைக்கு தீர்வு காண சிறப்பு செயற்குழு! -அமைச்சர் ஃபாமி ஃ பாட்சில்

புத்ராஜெயா, ஜூலை 19-

நாட்டில் இணைய பகடிவதை சம்பவங்களுக்குத் தீர்வு காண சிறப்பு செயற்குழு ஒன்றை அமைக்க இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இச்சிறப்பு செயற்குழுவில் தொடர்பு துறை அமைச்சு, உள்துறை அமைச்சு, பல்லூடக அமைச்சு மற்றும் பிரதமர் துறையின் சட்டப் பிரிவு(சட்டம் & மறுமலர்ச்சி பிரிவு) ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம் பெற்றிருப்பர் என்று தொடர்பு துறை அமைச்சர் ஃபாமி ஃ பாட்சில் கூறினார். 

தகவல் மற்றும் பல்லூடக அமைச்சு, அரச மலேசிய போலீஸ் படை மற்றும் சட்டத்துறை போன்றவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய சிறப்பு குழுவின் ஒத்துழைப்புடன் இக்குழு செயல்படும் என்றார். 

“இணைய பகடி வதை சம்பவத்தை அமைச்சு கடுமையாகக் கருதுகிறது. சம்பந்தப்பட்ட இணைய தள பொறுப்பாளர்கள் இதற்கு அவசியம் பொறுப்பேற்க வேண்டும். நழுவுதல் கூடாது” என்றார் ஃபாமி ஃ பாட்சில். 

“இதன் பொருட்டு நாங்கள் சட்ட அம்சங்களை ஆராய்வது, திருத்தம் செய்வது உள்ளிட்ட இணைய பகடி வதைக்குத் தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகளை ஆராய்வோம் “என்று பெர்னாமாவிடம் அவர் விவரித்தார் . 

spot_img

latest articles

explore more