Homeசமூகம்நாட்டில் தமிழ்மொழி செழித்தோங்க தமிழ்ப்பள்ளிகள் நிலைத்திருக்க வேண்டும் !ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன்

நாட்டில் தமிழ்மொழி செழித்தோங்க தமிழ்ப்பள்ளிகள் நிலைத்திருக்க வேண்டும் !ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன்

ஈப்போ, ஜூலை 21

இந்நாட்டில் தமிழ் மொழி செழித்தோங்குவதற்கு தமிழ்ப்பள்ளிகள் நிலைத்திருக்க வேண்டும் என்று இம்மாநில ஆட்சி குழு உறுப்பினர் அ. சிவநேசன் கேட்டுக் கொண்டார் .

பழமைவாய்ந்த மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியின் சிறப்புகள் தலைமுறை தலைமுறையாக கட்டிக் காக்கப்பட நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்றார் அவர் .

இதன் பொருட்டு தமிழ் மொழி மற்றும் தமிழ்ப்பள்ளி பங்காற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தற்போது தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.வருங்காலங்களில் இப்பள்ளிகளின் நிலை கேள்விக்குறியாகிவிடுமோ என்ற அச்சம் தோன்றுகிறது என்று
இங்குள்ள கிந்தா இந்தியர் சங்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற உலக தமிழ் எழுத்தாளர் தொடக்க மாநாட்டைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஈப்போ முத்தமிழ் பாவலர் மன்றம் மற்றும் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ‘ எனும் கருப்பொருளுடன் தொடங்கிய இந்த மாநாட்டில் பல நாடுகளில் இருந்து ஆயிரம் பேராளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

மாநில அரசு தமிழ்ப் பள்ளிகள், ஆலயங்கள் மட்டுமல்லாது இலக்கிய வளர்ச்சிக்கும் நிதியுதவி வழங்கி வருவதைச் சுட்டிக் காட்டிய அவர், இந்நிகழ்ச்சிக்காக 25,000 வெள்ளி வழங்கியிருப்பதாகச் சொன்னார்.

அருள் ஆறுமுகம் மிகச் சிறப்பாக வழி நடத்திய இம்மாநாட்டில்
ம.இ.கா.தேசிய உதவி தலைவர் முருகையா உரையாற்றினார்.

ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி உட்பட பிரமுகர்களின் வருகை விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தது.

spot_img

latest articles

explore more