Homeசமூகம்எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி:226  மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிதி! -டத்தோ ரமணன் வழங்கினார் 

எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி:226  மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிதி! -டத்தோ ரமணன் வழங்கினார் 

சுங்கை பூலோ, ஜூலை 21-

2023 எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த 226 மாணவர்களுக்கு  1லட்சத்து 250 வெள்ளி  ஊக்குவிப்பு  தொகையாக வழங்கப்பட்டது.

இந்நடவடிக்கையை பேங்க் ரக்யாட் அறவாரியத்துடன் இணைந்து  சுங்கை பூலோ நாடாளுமன்ற சேவை மையம் மேற்கொண்டதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

இந்த ஊக்குவிப்பு தொகையானது இம்மாணவர்களின் மேற்கல்விக்கு உதவும் என்றார்  தொழில் முனைவர் மேம்பாடு கூட்டுறவுத்துறை துணை அமைச்சரான ரமணன். 

 சுங்கை பூலோ  நாடாளுமன்ற தொகுதி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் பேங்க் ரக்யாட் அறவாரியம் கொண்டுள்ள அக்கறையை அவர் பாராட்டினார். 

அதே வேளையில், இந்த  முயற்சி நாடு முழுவதும் தொடர வேண்டும்.  இதன் வழி  நாட்டின் கல்வித் தரம்  உயரிய இலக்கை அடைய முடியும் என்றும் அறிக்கை ஒன்றின் வழி துணையமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். 

பண்டார் சுங்கை பூலோ இடைநிலைப்பள்ளி,  புக்கிட் காடிங் இடைநிலைப்பள்ளி, புக்கிட் ரஹ்மான் புத்ரா இடைநிலைப்பள்ளி, சவுஜானா உத்தாமா இடைநிலைப்பள்ளி, சுபாங் இடைநிலைப்பள்ளி, சுபாங் பிஸ்தாரி இடைநிலைப்பள்ளி, கோத்தா டாமன்சாரா செக்ஷன் 10 இடைநிலைப்பள்ளி  ஆகிய இடைநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த சிறந்த மாணவர்கள் இன்று காலை இங்கு டேவான் மெராந்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த ஊக்குவிப்பு தொகையை துணை யமைச்சரிடமிருந்து பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேங்க் ரக்யாட் தலைவர் டத்தோ பிலிப் பெனடிக்ட் லாசிம் பாங்கும் கலந்து கொண்டார்.

சிறந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பு, அவர்கள் தொடர்ந்து கல்வியில் வெற்றிபெறுவதற்கு உந்து சக்தியாக இருக்கும் என்றார் அவர். 

spot_img

latest articles

explore more