Homeசமூகம்செந்தோசா சட்டமன்றத்தின்  தூய்மை & பசுமை நிகழ்ச்சிகளுடன் பூத்துக் குலுங்கியது  பட்டர்ஃபிளை பூங்கா!

செந்தோசா சட்டமன்றத்தின்  தூய்மை & பசுமை நிகழ்ச்சிகளுடன் பூத்துக் குலுங்கியது  பட்டர்ஃபிளை பூங்கா!

  செந்தோசா, ஜூலை 22 –

செந்தோசா  சட்டமன்றத்தின்  தூய்மை  மற்றும் பசுமை இயக்கத்தின் கீழ்  தரம் உயர்த்தப்பட்ட பண்டார் புக்கிட் திங்கி 2, பட்டர்ஃபிளை பூங்காவில்  பல்வேறு  வகையான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன .

300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில்  இசையுடன் கூடிய உடற்பயிற்சி, பல்வகை விளையாட்டு போட்டிகள், துப்புரவு, மரம் நடும் பணி முதலியவை அனைவரையும் களிப்பில் ஆழ்த்தியது. 

மலேசிய சூ சி அறவாரியத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற மறுசுழற்சி நடவடிக்கையிலும் சுற்று வட்டார மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஒவ்வொரு 3  கிலோ கிராம்  மறு சுழற்சி  பொருட்களுக்கு    அதிர்ஷ்ட  குலுக்கு  கூப்பன் வழங்கப்பட்டு  மடிக்கணினி,  கைத்தொலைபேசி, சைக்கிள்  போன்ற  பயனுள்ள  சாதனங்கள்  பரிசுகளாக வழங்கப்பட்டன . 

மூன்றே மணி நேரத்தில்  500 கிலோ கிராம்  மறுசுழற்சி  பொருட்கள்  சேகரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

 சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார துறைக்கான  மாநில  ஆட்சி குழு உறுப்பினர்  ஒன் ஜமாலியா   ஜமா லுடினின் வருகை  இந்நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தது .

 இவர்  கிள்ளான் அரச மாநகர் மன்ற  துணை இயக்குனர்   ஜைரீசால் அகமது ஜைனுடின்,   புவான் அசுரா,  மன்ற உறுப்பினர்  ஞானேஸ்வரன்   ரோய்  மற்றும்  தங்கராஜா  ஆகியோருடன் இணைந்து  மரங்களை நடும்  பணியில் ஈடுபட்டார் .

 செந்தோசா சட்டமன்ற தொகுதியின்  தூய்மை மற்றும்  பசுமை  இயக்கத்தின்  வெற்றிக்காகக்  தோள் கொடுத்த  அனைவருக்கும்   இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்  டாக்டர்   குணராஜ்   ஜோர்ஜ்  நன்றி  தெரிவித்துக் கொண்டார் .

spot_img

latest articles

explore more