Homeசமூகம்ரவாங், வெல்மன் சாலையை லிட்டில் இந்தியாவாக பிரகடனப்படுத்துவீர்!  -மாநில சட்டமன்றத்தில் பரிந்துரை

ரவாங், வெல்மன் சாலையை லிட்டில் இந்தியாவாக பிரகடனப்படுத்துவீர்!  -மாநில சட்டமன்றத்தில் பரிந்துரை

 

ஷா ஆலம், நவ. 21-

ரவாங், வெல்மன் சாலையை லிட்டில் இந்தியாவாக பிரகடனப்படுத்தும்படி அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் மாநில சட்டமன்றத்தில் பரிந்துரையை முன் வைத்தார்.

அந்தச் சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதோடு போதுமான அளவு கார் நிறுத்துமிட வசதியை ஏற்படுத்தித்தருவதன் வழி ரவாங் லிட்டில் இந்தியா பகுதியை தரம் உயர்த்தலாம் என்று அவர் ஆலோசனை தெரிவித்தார் .

நேற்று மாநில சட்டமன்றத்தில் 2025ஆம் ஆண்டிற்கான விநியோக மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர்இவ்வாறு குறிப்பிட்டார்.

லிட்டில் இந்தியா பகுதியை தரம் உயர்த்துவதன் மூலம் அதிகமான சுற்றுப் பயணிகளை ஈர்ப்பதற்கும் வட்டார பொருளாதாரத்திற்குப் புத்துயிரூட்டுவதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்பதோடு அப்பகுதியில் இந்தியப் பாரம்பரிய அடையாளங்களை தொடர்ந்து நிலை நிறுத்தவும் இயலும் என்றார்.

சிலாங்கூர் மாநிலத்தில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்று ரவாங். இந்நகரில் அமைந்துள்ள இந்த வெல்மன் சாலையில் உணவகங்கள், மளிகைக் கடைகள், பூக்கடைகள், வழிபாட்டுப் பொருள் விற்பனை மையங்கள் உள்பட இந்தியர்களுக்கு சொந்தமான ஏராளமான வணிக வளாகங்கள் இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

 

 

spot_img

latest articles

explore more