கோலாலம்பூர், டிச.5–
ஆஸ்ட்ரோவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரத்தியேக உள்ளூர் தமிழ் ரியாலிட்டி நடனப் போட்டி ஆட்டம், டிசம்பர் 7 இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் முதல் ஒளிபரப்பு காண்கிறது.

புதுப்பிக்கப்பட்ட தோற்றத்துடன் திரும்பும் ஆட்டம், இந்நிகழ்ச்சியின் பிரசித்திப் பெற்ற முகங்களாகவும் குறிப்பிடத்தக்கத் தொகுப்பாளர் ஜோடியாகவும் திகழும் டெனெஸ் குமார் மற்றும் விகடகவி மகேன் ஆகியோரை 13 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைக்கிறது.

ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர், பிரேம் ஆனந்த் கூறுகையில், “ஆர்வமுள்ள உள்ளூர் நடனக் கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கும் எங்களின் பிரபலமான நடனப் போட்டியான ஆட்டம்-ஐ மறுதொடக்கம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். முதல் நிலை வெற்றியாளராக மகுடம் சூடுவதற்கான வாய்ப்பிற்காகப் போட்டியிடும் 22 அணிகளுக்கு இடையிலான தீவிரமானப் போட்டி நிச்சயமாக எங்கள் வாடிக்கையாளர்களை அவர்களின் இருக்கைகளின் விளிம்பில் வைத்திருக்கும்”.

உள்ளூர் கலைத்துறையில் 35 ஆண்டுகளாகப் பல பாத்திரங்களை வகித்த புகழ்பெற்ற நடனக் கலைஞர், நடன இயக்குனர், மற்றும் நடிகர் எம்.ஜே. நாடாவும் தொகுப்பாளர், நடனக் கலைஞர், மற்றும் உள்ளூர் நடனப் பள்ளியின் இணை நிறுவனர் மட்டுமல்லாது ஆட்டம் 100 வகை தொகுப்பாளருமான அருணாவும் நடுவர்களாகப் பொறுப்பேற்பர். சிங்கப்பூரின் சிறந்த நடனக் கலைஞர், நடன இயக்குனர், நடிகர், இயக்குனராக மூன்று தசாப்தங்களுக்கு மேலாக கலைத்துறையில் அனுபவம் உள்ளவர் மற்றும் ஆட்டம் 100 வகை சீசன் 3-இன் வெற்றியாளர்களில் ஒருவரான ராமேஸ்வரா இவர்களுடன் நடுவராகக் கைகோர்ப்பார்.

விருந்தினர் நடுவர்களாகச் சிறப்பு பொறுப்பேற்கும் பல்வேறு பிரபலமான நடன ஐகான்களையும் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

வி-ஹாரா, ஷர்பசரா, ரூபினி ஆர்ட்ஸ், தக்ஷா ஆர்ட்ஸ், திரிசூல் டான்சர், என்டிஎ, டிஎ டான்சர்ஸ், கடாரம் சிற்பங்கள், எம்ஆர்பி பிரதர்ஸ், ரியானா ஆர்ட்ஸ், கேஜே டான்சர்ஸ், ஸ்ரீ அக்னி டான்ஸ் குரூப், கீதா டான்ஸ் அகாடமி, யுஎம்டி, ஏஸ் ஆஃப் பீஸ், மில்லினியம் ஆர்ட்ஸ், திரவ், ஹைப்பர்ஃப்ளெக்ஸ் டிசி, மகாராணி, டி’ஃப்ரெஷர்ஸ், சிவாலயாஸ் ஆர்ட்ஸ் மற்றும் கேஎல்எம்டி பாய்ஸ் உள்ளிட்ட 22 அணிகள் ஆட்டம் நிகழ்ச்சியில் இடம்பெறும்.

(போட்டியாளர்களின் முழுப் பட்டியலுக்குப் பின்னிணைப்பை அணுகவும்)
ஆட்டம் போட்டியின் வெற்றியாளர்கள் பின்வரும் ரொக்கப் பரிசுகளை வீட்டிற்குத் தட்டிச் செல்லும் வாய்ப்பைப் பெறுவர்:
முதலாம் பரிசு: ரிம50,000.00
இரண்டாம் பரிசு: ரிம25,000.00
2 ஆறுதல் பரிசுகள்: ஒவ்வொரு குழுக்கும் தலா ரிம5,000.00; மற்றும்
இறுதிச் சுற்றுப் போட்டியாளர்கள்: ஒவ்வொரு குழுக்கும் தலா ரிம2,000.00

ஆட்டம் நிகழ்ச்சியின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கண்டு மகிழுங்கள். மேல் விபரங்களுக்கு astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.