செனாவாங், டிச.16-
செலாயாங்கில் கெபிடல் செனாவாங் ஹால் 7 மண்டபங்களுடன் 15 ஆண்டுகள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றது. தற்போது செனாவாங்கில் 2ஆவது கிளை திறக்கப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ ஹரி தெரிவித்தார்.
இங்கு ஒரே இடத்தில் 3 மண்டபங்கள் செயல்பட்டு வருகின்றன. பெரிய மண்டபம் 120 மேசைகளைக் கொண்டுள்ள வேளையில் சிறிய மண்டபத்தில் 50முதல் 200 பேர் வரையிலும் அமரலாம்.
“இங்கு விசேஷமானது என்னவென்றால் சிறிய திட்டத்தில் 3,000 வெள்ளியிலேயே அனைத்து நிகழ்வுகளையும் நடத்தலாம். அதே வேளையில், 10,000 வெள்ளியில் திருமண வைபவத்திற்கான திட்டத்தையும் நாங்கள் கொண்டுள்ளோம்” என்றார் ஹரி.
அடுத்து, நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது பற்றிக் கற்றுக் கொள்ள விரும்புவோருக்கு இலவசமாகப் பயிற்சிகள் வழங்கப்படும்.

இதில் கட்டணத்தைப் பற்றி யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தாராளமாக வந்து எங்களைச் சந்திக்கலாம். இந்த வர்த்தகத்தில் நாங்கள் 15 ஆண்டு காலமாக ஈடுபட்டு வருகிறோம் என்றார்.
செனாவாங் பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த மண்டபத்தில் திருமண வைபவத்தை நடத்தலாம். எந்த நிகழ்வுக்கும் விலைப்பட்டியலைச் சரி பார்க்கலாம். நாங்கள் நிச்சயமாக நியாயமான வகையிலேயே கட்டணத்தை விதிப்போம்.
இந்த மண்டப திறப்பு விழாவில் 1 மாத காலத்தில் முன்பதிவு செய்பவர்களுக்குத் திருமணம் என்றால் அவர்களுக்கு 1,000 வெள்ளி அன்பளிப்பு வழங்கப்படும் என்று டத்தோஸ்ரீ ஹரி குறிப்பிட்டார்.
செனாவாங்கில் கெபிடல் செனாவாங் ஹால் நிறுவனத்தின் 2ஆவது கிளை திறப்பு விழா!


