Homeகுற்றவியல்எல்ஆர்டி நிலையத்தில் கைகலப்பு: ஆடவர்கள் இருவர் தடுத்து வைப்பு

எல்ஆர்டி நிலையத்தில் கைகலப்பு: ஆடவர்கள் இருவர் தடுத்து வைப்பு

பெட்டாலிங் ஜெயா, டிச. 24-காற்பந்து ஆதரவு குழுக்களிடையே நடந்த கைகலப்பு தொடர்பில் இரு ஆடவர்களை போலீசார் கைது செய்தனர்.

இச்சம்பவம், பண்டார் தாசேக் செலாத்தான் எல்ஆர்டி நிலையத்தில் கடந்த சனிக்கிழமை நடந்தது.

இக்குழுக்களின் செயல் அடங்கிய காணொளியைத் தாங்கள் கண்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் ருஸ்டி முகமது ஈசா கூறினார்.

இச்சம்பவம் காரணமாக எல்ஆர்டி ரயிலின் செயல்பாடுகள் 8 நிமிடத்திற்குத் தடைபட்டதாக அவர் மேலும் சொன்னார்.

“இச்சம்பவம் தொடர்பில் 22 மற்றும் 24 வயது சந்தேகப் பேர்வழிகளை நாளை வரை நாங்கள் தடுப்புக் காவலில் வைத்திருப்போம்” என்றார்.

spot_img

latest articles

explore more