Homeசமூகம்நாட்டில் போதிய அளவில் அரிசி கையிருப்பு!  -பெர்னாஸ்

நாட்டில் போதிய அளவில் அரிசி கையிருப்பு!  -பெர்னாஸ்

ஷா ஆலம், ஜன. 3-மலேசியா இதுவரை அரிசி விநியோகத்தில் எவ்வித தடையையும் எதிர்நோக்கவில்லை. தற்போது இதன் கையிருப்பு போதிய அளவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி கையிருப்பு நாட்டுக்குத் தேவையான அளவு இருப்பதாக பாடிபெராஸ் நேஷனல் பெர்ஹாட் (பெர்னாஸ்) அறிக்கை ஒன்றின் வழி குறிப்பிட்டது.

இதன் பொருட்டு அரிசி விநியோகம் எவ்வித தடையுமின்றி தொடர்வதைத் தாங்கள் உறுதி செய்வதாக பெர்னாஸ் கூறியது.

“2024 டிசம்பர் 1ஆம் தேதி முதல் தீபகற்ப மலேசியாவின் பெர்னாஸ் நுழைவாயில் கிடங்குகளில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு 3,000 வெள்ளியில் இருந்து 2,800 வெள்ளிக்கு நாங்கள் மீண்டும் குறைத்துள்ளோம்” என்று அவ்வறிக்கை சுட்டிக் காட்டியது.

 

 

spot_img

latest articles

explore more