Homeசமூகம்இந்தியர்களின் பொருளாதார உயர்வுக்கு மடானி அரசின் வியூக திட்டம்!  -டத்தோஸ்ரீ ரமணன் 

இந்தியர்களின் பொருளாதார உயர்வுக்கு மடானி அரசின் வியூக திட்டம்!  -டத்தோஸ்ரீ ரமணன் 

புத்ராஜெயா, ஜன. 17-பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மற்றும் கூட்டுறவு மற்றும் தொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை அமைச்சர் டத்தோ இவோன் பெனடிக் ஆகியோரின் ஆதரவின் கீழ் மடானி அரசாங்கம் இந்தியர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது.

அவ்வகையில் கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தொழில் முனைவர் கடனுதவி (தெக்குன் – ஸ்பூமி) திட்டத்தின் கீழ் இவ்வாண்டு மிகப்பெரிய ஒதுக்கீடாக 100 லட்சம் வெள்ளி வழங்கப்பட்டுள்ளது. இந்திய வர்த்தகர்களை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் கொண்டுள்ள வியூக திட்டத்தையே இது காட்டுகிறது என்று கூட்டுறவு மற்றும் தொழில் முனைவர் மேம்பாட்டு துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பிரதமர் இந்திய தொழில் முனைவர்களின் மேம்பாட்டிற்காக தெக்குன் வாயிலாக 30 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்தார். நாடு முழுவதும் உள்ள 5,000திற்கு மேற்பட்ட இந்திய தொழில் முனைவர்களின் நலனுக்காக கூடுதலாக 70 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்தார்.

“இந்த நிதி சம்பந்தப்பட்டவர்களுக்குச் சென்று சேர்வதை நான் அணுக்கமாகக் கண்காணித்து வருவேன்.இந்நடவடிக்கை சுமூகமாக நடைபெறுவதை தெக்குன் தலைமைத்துவத்துடன் இணைந்து எனது அலுவலக பணியாளர்கள் செயல்படுவர்” என்றார் ரமணன்.

2007 ஆம் ஆண்டு தொடங்கி 26,804 இந்திய தொழில் முனைவர்களுக்கு தெக்குன் 500 லட்சம் வெள்ளி கடனுதவியை வழங்கியுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஸ்பூமி வாயிலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 58.9 லட்சம் வெள்ளி வழி 2,408 இந்திய தொழில் முனைவர்கள் பயனடைந்தனர். அதே சமயம், 2024 ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட ஸ்பூமி கோஸ் வாயிலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 12.6 லட்சம் வெள்ளி வாயிலாக 287தொழில் முனைவர்கள் பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

spot_img

latest articles

explore more