Homeசமூகம்இளைஞர்கள் சட்டவிரோத செயல்களைத் தவிர்க்க வேண்டும்! -பாப்பாராய்டு அறிவுறுத்து

இளைஞர்கள் சட்டவிரோத செயல்களைத் தவிர்க்க வேண்டும்! -பாப்பாராய்டு அறிவுறுத்து

ஷா ஆலம், பிப். 20 – நாட்டிலுள்ள இளைஞர்கள் குற்றச் செயல்கள் குறிப்பாக போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இம்மாநில மனித வளம் மற்றும் வறுமைஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கேட்டுக் கொண்டார்.

சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் மலேசிய இளைஞர்பன்னீர் செல்வம் பரந்தாமனின் வழக்கை சுட்டிக்காட்டிய அவர், அறிந்தோ அறியாமலோ  செய்யக்கூடிய இத்தகைய குற்றங்கள் தங்களை மரணத்தின் வாசலுக்கே இட்டுச் செல்லும் என்பதோடு குடும்பத்தையும் நிர்க்கதியாக்கிவிடும் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்றார்.

தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகள் மீது பெற்றோர்கள் அதி கவனம்செலுத்த வேண்டும்.

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கையை அமலாக்கத் தரப்பினர் வலுப்படுத்துவதன் வாயிலாவும் இளம் தலைமுறையினர் போதைப்பித்தர்களாகவும் போதைப் பொருள் விநியோகிப்பாளர்களாகவும் மாறிஎதிர்காலத்தை சீரழித்து விடுவதைத் தடுக்க முடியும்.

போதைப் பொருள் கடத்தல் கும்பல்களின் மூளையாகச் செயல்படுவோரை துடைத்தொழித்தால் மட்டுமே நாட்டின் எதிர்கால சொத்தாக விளங்கும்இளைஞர்களை போதைப் பொருள் அபாயத்திலிருந்து காப்பாற்ற முடியும் என்றார்.

மலேசியாவில் போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு கட்டாயமரண தண்டனை விதிக்கும் சட்டத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு சில திருத்தங்கள் செய்யப்பட்டு நீதிபதியின் விவேகத்திற்கு உட்பட்டு தண்டனைவிதிக்க வகை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய பாப்பாராய்டு , எனினும்,சிங்கப்பூர் அரசாங்கம் தொடர்ந்து இத்தகையகுற்றங்களுக்கு எதிராககடுமையான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள கும்பல்களின்நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு மலேசியாவும் சிங்கப்பூரும்ஒருங்கிணைந்த விவேக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும்அவர் குறிப்பிட்டார் .

சட்டத்திற்குப் புறம்பான எந்தநடவடிக்கையிலிருந்தும் விலகியிருக்கும்படி இந்நாட்டு இந்திய இளைஞர்களை அவர் கேட்டுக் கொண்டார். கூடா நட்பு மற்றும் குறுகிய காலத்தில் அதிக லாபத்திற்கு ஆசைப்படுவதுபோன்றவை பல சந்தர்ப்பங்களில் நம்மை பாழும் கிணற்றில் தள்ளிவிடும்.

தன்மானமும் தொலைநோக்குச் சிந்தனையும் கொண்ட சமூகமாக நாம்மாற வேண்டும். அதற்குத் தீய எண்ணங்கள் நம்மை  ஆட்கொள்ளாமல் இருப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

“மனித வளத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற முறையில் நமதுஇளைஞர்கள் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொள்வதற்கு ஏதுவாகவேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கான திட்டங்களைஅமல்படுத்தி வருகிறேன்” என்றார்.

நாடு முழுவதும் நடத்தி வரும் நடத்தி வரும் இத்தகைய வேலை வாய்ப்புச் சந்தைகள் மூலம் முன்னாள் கைதிகளும் வேலைகளைப் பெற்று சமுதாயத்தில் சிறந்த குடிமகன்களாக மாறுவதற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்தித் தருகிறோம் என்று பாப்பாராய்டு விவரித்தார்.

-சிலாங்கூர் கினி

 

spot_img

latest articles

explore more