சிலாங்கூர் பி40 இந்திய மாணவர்களுக்கான உயர் கல்வி நிதி: விண்ணப்பிக்க வேண்டிய
ஷா ஆலம், மார்ச் 12-சிலாங்கூர் மாநிலத்தில் 3,000 வெள்ளி அல்லது அதற்கும் குறைவாக குடும்ப வருமானமாகப் பெறும் இந்திய மாணவர்கள் உயர்கல்வி நிதிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
இதற்கான இறுதி நாள் மார்ச் 14 ஆம் தேதியாகும் என்று மனித வளம் மற்றும் வறுமை
ஒழிப்புத் துறைக்கான இம்மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு குறிப்பிட்டார்.
“டிப்ளோமா அல்லது இளங்கலை பயிலும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம்.குறிப்பாக முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும் “என்றார் அவர்.
பாரங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த பின்னர் நாளை மறுநாள் மார்ச் 14 ஆம் தேதி பிற்பகல் 12.30 மணிக்குள் தனது அலுவலகத்தில் நேரடியாக ஒப்படைக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கு முன்பு நிபந்தனைகளை கவனமுடன் வாசிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
முழுமையான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும்.
இறுதி நாளுக்குப் பின்னர் வரும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படமாட்டா.
விண்ணப்பங்களை ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டுவின் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது கீழ்க்காணும் அவரின் மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ அல்லது இணைய அகப்பக்கம் வாயிலாகவோ பதிவிறக்கம் செய்யலாம்.
excoofficepapparaidu@gmail.com / https://ls.selangor.my/Cefq3l
மேல் விவரங்களுக்கு 03-55447307 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


