கோலாலம்பூர், மார்ச் 12-அம்னோவில் தனது எதிர்காலம் தொடர்பான முடிவில் அவசரம் காட்ட வேண்டாம் என்று தெங்கு ஜஃப்ருலைத் தாம் கேட்டுக் கொண்டதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜாகிட் ஹமிடி தெரிவித்தார்.
கடந்த வாரம் தெங்கு ஜஃப்ருலைச் சந்தித்த தான் கோத்தா ராஜா டிவிஷன் தலைவர், உச்சமன்ற உறுப்பினர் போன்ற பதவிகள் வாயிலாக கட்சிக்கு இவர் ஆற்றி வரும் சீரிய பணிகளைச் சுட்டிக் காட்டியதாகச் சொன்னார்.
“ஆகையால் இந்த விவகாரத்தில் அவசரம் காட்ட வேண்டாம் என்று முதலீடு, வர்த்தக & தொழிற்துறை அமைச்சருமான தெங்கு ஜஃப்ருலுக்கு நான் ஆலோசனை கூறினேன். அவரும் இதனை ஏற்றுக்கொண்டார்” என்றார்.
இதனையடுத்து இன்று வரை இவர் அம்னோ உறுப்பினராகவே தொடர்ந்து நீடித்து வருகிறார் என்றார் துணைப்பிரதமருமான ஜாகிட் ஹமிடி.