புத்ராஜெயா, மார்ச் 14-
மலேசிய இந்திய சமூக உருமாற்ற பிரிவு (மித்ரா) உயர் கல்வி கழக தொடக்க நிதியுதவி திட்டத்தின் (ஐபிடி 4.0 மித்ரா)கீழ் 12,400 இந்திய பி 40 மாணவர்களுக்காக 25 மில்லியன் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
கடந்தாண்டு மித்ரா உயர்கல்வி உதவி நிதிக்காக (ஐபிடி 4.0 மித்ரா)விண்ணப்பம் செய்த 12,626 அரசாங்க மற்றும் தனியார் பல்கலைக்கழக மாணவர்களில் 8,791 பேரின் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டதாக மித்ரா சிறப்பு குழு தலைவர் பி.பிரபாகரன் தெரிவித்தார்.
ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் தகுதி பெற்ற மாணவர்களுக்கான இந்த நிதி அவர்களின் பேங்க் சிம்பானான் நேஷனல் வங்கிக் கணக்கில் கட்டம் கட்டமாக செலுத்தப்படும் என்றார் அவர்.
பி 40 பட்டியலில் இடம் பெறாதவர்கள், மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் உட்பட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.
2024 ஐபிடி 4.0 மித்ரா உதவி நிதிக்குத் தகுதி பெற்ற மாணவர்களின் பட்டியலை மித்ரா அகப்பக்கம் வழி மாணவர்கள் இப்போது முதல் சரிபார்த்துக் கொள்ளலாம்.
இது தொடர்பான மேல் விவரங்களுக்கு அலுவலக நாட்களில் காலை மணி 9. 00 தொடங்கி மாலை 5.30 மணி வரை 03-8886 6192 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
charaniyaa@mitra.gov.my அல்லது ktk_prishanthini@mitra.gov.my. எனும் மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்பு கொள்ளும்படி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.


