சிரம்பான், மார்ச் 15-வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் பிகேஆர் தேர்தலில் அதன் உதவித் தலைவர் பதவியைத் தாம் தற்காத்துக் கொள்ளப் போவதாக நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ உத்தாமா அமினுடின் ஹருண் தெரிவித்தார்.
இம்முறை இப்பதவிக்கு அதிகமானோர் போட்டியிடும் சாத்தியம் உள்ளது. ஆகையால், இப்பதவியைத் தற்காத்துக் கொள்வது சவால்மிக்கது என்றார் அவர்.
“எனினும், உதவி தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று நான் நினைக்கின்றேன்” என்றார் சிக்காமட் சட்டமன்ற உறுப்பினருமான அமினுடின் .
போட்டி என்பது ஜனநாயக நடைமுறையாகும் இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
“வெற்றி வாய்ப்பு என்பது சற்றுகடினமானதுதான்.இப்போது நாம் அரசாங்கமாக விளங்குகிறோம்.அதிகமான தலைவர்கள் உதவி தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம்” என்று சினார் ஹரியானிடம் அவர் விவரித்தார் .
மிகப்பெரிய பிகேஆர் கட்சியில் வெற்றி தோல்வி என்பது வழக்கமான ஒன்றாகும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார் .