Homeசமூகம்பேரா இந்தியர் முஸ்லிம் இயக்கத்தின் ஏற்பாட்டில் 100 பேருக்கு நோன்பு பெருநாள் அன்பளிப்பு !

பேரா இந்தியர் முஸ்லிம் இயக்கத்தின் ஏற்பாட்டில் 100 பேருக்கு நோன்பு பெருநாள் அன்பளிப்பு !

ஈப்போ, மார்ச் 15-புனித ரமலான் மாதத்தில் ஏழை எளியவர்களுக்கு உதவும் பொருட்டு பேரா இந்திய முஸ்லிம் இயக்கம் (பிரிம்) சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் நூறு பேருக்கு நோன்பு பெருநாள் அன்பளிப்புகளை வழங்கியது.

இந்நிகழ்ச்சி இங்குள்ள இந்திய முஸ்லிம் பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த அன்பளிப்பு பெருநாள் கால தேவைகளை நிறைவேற்ற உதவும் என்று பிரிம் இயக்கத்தின் தலைவர் முகமட் அரிப் அலியா நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த அன்பளிப்பு இன்று 100 பேர் நாளை மேலும் 100 பேர் என இரண்டு கட்டங்களாக வழங்கப்படும் என்றும் முகமட் அரிப் சொன்னார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை புரிந்த மனிதவள மேம்பாட்டு கழக தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ வீரா ஷாகுல் டவுட் மக்களுக்கு நோன்பு பெருநாள் அன்பளிப்புகளை வழங்கிமகிழ்ச்சிப்படுத்தினார்.

ஆண்டு் தோறும் பிரிம் இயக்கம் இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வருவதாகவும் இன்றைய நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெறுவதற்கு டத்தோ வீரா ஷாகுல் டவுட் பேராதரவு வழங்கியதாகவும் முகமட் அரிப் விவரித்தார் .

இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட அன்பளிப்பு அனைவருக்கும் பெருநாள் குதூகலத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.

 

spot_img

latest articles

explore more