Homeசமூகம்சிறை, பிரம்படி & அபராதத்தை ரத்து செய்யக் கோரி சைட் செடிக் மேல் முறையீடு!

சிறை, பிரம்படி & அபராதத்தை ரத்து செய்யக் கோரி சைட் செடிக் மேல் முறையீடு!

புத்ராஜெயா, மார்ச் 19-
மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் செடிக் அங்காத்தான் பெர்சத்து அனாக் மூடா(அர்மாடா) நிதி வழக்கில் மேல் முறையீடு செய்வதற்காக காலை மணி 8. 34 க்கு இங்குள்ள புத்ராஜெயா மேல் முறையீட்டு நீதிமன்றம் வந்தடைந்தார்.

பார்டி ஈக்காத்தான் டெமோகிராடிக் மலேசியா (மூடா) கட்சியின் முன்னாள் தலைவரான சைட் செடிக் தனது குடும்பத்தார், கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் நீதிமன்றம் வந்தார்.

அர்மாடா நிதி தொடர்பான 4 குற்றங்களுக்காக முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான சைட் செடிக்கிற்கு எதிராக ஏழாண்டுகள் சிறை, இரு பிரம்படிகள் மற்றும் 10 லட்சம் வெள்ளி அபராதம் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டது.

spot_img

latest articles

explore more