Homeசமூகம்சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு சிறப்பு உதவி நிதியாக அரை மாத ஊதியம்! மாநில மந்திரி...

சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு சிறப்பு உதவி நிதியாக அரை மாத ஊதியம்! மாநில மந்திரி பெசார் அறிவிப்பு

ஷா ஆலம், மார்ச் 19-

மாநில அரசாங்கத்தின் நடப்பு நிதி அடைவு நிலை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதைத் தொடர்ந்து இம்மாநில அரசு ஊழியர்களுக்கு சிறப்பு உதவி நிதியாக அரை மாத சம்பளம் அல்லது கூடிய பட்சம் ஆயிரம் வெள்ளி வழங்கப்படும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

 

மாநில அரசாங்கத்தின் நிதி நிலையை மேம்படுத்துவதற்காக அரசு ஊழியர்கள் கடுமையாகப் பாடுபட்டுள்ளனர். இவர்களின் சேவையை அங்கீகரிக்க இச்சிறப்பு நிதி இவர்களுக்கு வழங்கப்படுவதாக மந்திரி பெசார் விவரித்தார்.

 

இச்சிறப்பு நிதி மாநில வருமான பதிவு ஊக்குவிப்பு வாயிலாக வரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் கட்டம் கட்டமாக வழங்கப்படும் என்றார் அமிருடின்.

 

26 லட்சம் வெள்ளியை உட்படுத்தியிருக்கும் இச்சிறப்பு நிதி வாயிலாக இம்மாநிலத்தில் உள்ள சுமார் 18,000அரசு ஊழியர்கள் நன்மை அடைவர் என்றும் அவர் சொன்னார்.

 

spot_img

latest articles

explore more