Homeசமூகம்தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டலாபிஷேக பூஜை:பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வேய்ன் ஓங் வருகை

தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டலாபிஷேக பூஜை:பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வேய்ன் ஓங் வருகை

ஸ்ரீ கெம்பாங்கான், மார்ச் 20-இங்குள்ள தாமான் பலாக்கோங் ஜெயாவில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டலாபிஷேக பூஜையில் பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வேய்ன் ஓங் சுன் வேய் கலந்து கொண்டார்.

இந்த ஆலயத்தில் கடந்த 16ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இதில் சுற்றுவட்டார பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து ஆலயத்தில் தற்போது மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

திங்கட்கிழமை நடந்த பூஜையில் வேய்ன் ஓங் சுன் வேய் கலந்து கொண்டார்.

தலைவர் லோகநாதன், செயலாளர் ரகுநாதன் மற்றும் துணை பொருளாளர் என். சாமி ஆகியோர் உள்ளிட்ட ஆலய நிர்வாகத்தினரை இவர் சந்தித்துப் பேசினார். இதில் சமூக தலைவர் கிறிஸ்டியும் கலந்து கொண்டார்.

மார்ச் 17 ஆம் தேதி தொடங்கிய ஆலய மண்டலாபிஷேக பூஜைகள் வரும் மே 3 ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

 

spot_img

latest articles

explore more