Homeசமூகம்மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் பாதுகாக்கப்படும்! அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் பாதுகாக்கப்படும்! அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

கோலாலம்பூர், மார்ச் 20-தலைநகர் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் இம்மாதம் 27 ஆம் தேதி  உடைபடாது. மாறாக, இட மாற்றம் செய்யப்படும். இதற்குக் கால அவகாசம் தேவைப்படும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினர் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு தன்னை அணுகியதாவும் இது தொடர்பாக பல விவாதங்களும் சந்திப்புகளும் நடத்தப்பட்டதாகவும் அமைச்சர் சொன்னார் .

“இதற்கு சுமூகத் தீர்வைக் காண ஏதுவாக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரனுடன் இணைந்து சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பணியாற்றி வருகிறேன்”என்றார் அவர்.

“இந்தப் பிரச்சினைக்கு நியாயமாகவும், பக்தர்களைப் புண்படுத்தாத வகையிலும், அனைத்துத் தரப்புகளுக்கும் ஏற்ற தீர்வைக் காணும் வகையில் இந்த முயற்சியை நான் மேற்கொண்டு வருகிறேன்” என்றார் ஜசெக தலைவருமான கோவிந்த் சிங்.

இந்த ஆலய விவகாரத்திற்குத் தீர்வு காண அனைத்து வழிகளும் ஆராயப்படுவதை உறுதி செய்வதற்காக இது குறித்து அமைச்சரவையில் பல முறை பேசியுள்ளேன்.

கோயிலை இடமாற்றம் செய்வதற்கான மாற்று நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் ஏதுவான சிறந்த முடிவைப் பெறுவதற்கு பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன என்றார் அவர்.

கோலாலம்பூரில் பரபரப்புமிக்க ஜாலான் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் வரும் 27 ஆம் தேதி உடைக்கப்படாது. கோயிலை புதிய இடத்திற்கு மாற்ற, கோவில் நிர்வாகத்திற்கு நியாமான கால அவகாசம் வழங்கப்படும் என்று கோலாலம்பூர் மாநகர் மன்ற டத்தோ பண்டார் டத்தோஸ்ரீ டாக்டர் மைமுனா முகமது ஷெரீப் இன்று ஆலய நிர்வாகத்தினரிடம் உறுதியளித்தார்.

இந்த இடத்தில் மசூதி அமைக்கும் திட்டத்தால் பக்தர்கள் பீதியடைந்தனர். இந்தத் திட்டம் குறிப்பிட்ட நிலத்தில் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரான ஒரு தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இதனால் ஆலயம் உடைபடும் அபாயம் பக்தர்களை கவலையுறச் செய்துள்ளது.

இந்த ஆலய விவகாரத்தில் அனைத்து தரப்புகளுக்கும் ஏற்ற தீர்வைக் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் அனைவரும் ஒத்துழைப்பு நல்குவது அவசியம் என்று கோவிந்த் சிங் கேட்டுக் கொண்டார்.

 

 

spot_img

latest articles

explore more