Homeசமூகம்ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் உடைபடாது!  -டத்தோ பண்டார் டத்தோஸ்ரீ...

ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் உடைபடாது!  -டத்தோ பண்டார் டத்தோஸ்ரீ மைமுனா உறுதி

கோலாலம்பூர் மார்ச் 20-தலைநகர், ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் அமைந்திருக்கும் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் உடைபடாது என்று கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் தலைவர் டத்தோஸ்ரீ மைமுனா முகமது ஷரிஃப் உறுதியளித்தார்.

இந்த ஆலயம் அமைந்துள்ள நிலம் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமாகும். இங்கு பள்ளிவாசல் கட்டுவதற்கும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆனால், தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் பல ஆண்டுகளாக இங்கு இயங்கி வருகிறது.

“இந்நிலையில் இந்த விவகாரத்தில் இப்போதைக்கு எவ்வித முடிவும் எடுக்க இயலாது”என்றார் டத்தோ பண்டார்.

இந்த ஆலயத்திற்கு மாற்று நிலம் வழங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஆலய நிர்வாகம் தங்களுக்கு இதே நிலத்தை வழங்கும்படி  கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விவகாரத்தில் சுமூகமான தீர்வு காண அனைத்து தரப்பினருடன் பேச்சு நடத்துவது அவசியம் என்றார் டத்தோ பண்டார்.

 

 

spot_img

latest articles

explore more