Homeசமூகம்நோன்பு பெருநாளையொட்டி பலாக்கோங்கில்  750 பேருக்கு “ஜோம் ஷாப்பிங்” பற்றுச் சீட்டுகள்! 

நோன்பு பெருநாளையொட்டி பலாக்கோங்கில்  750 பேருக்கு “ஜோம் ஷாப்பிங்” பற்றுச் சீட்டுகள்! 

செராஸ் , மார்ச் 25-விரைவில் கொண்டாடப்படும் நோன்பு பெருநாளை முன்னிட்டு பலாக்கோங் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 750 பேருக்கு “ஜோம் ஷாப்பிங்” பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.

இந்தப் பற்றுச் சீட்டுகளைப் பயன்படுத்தி இங்குள்ள இக்கோன்சேவ் பேரங்காடியில் இவர்கள் பொருட்களை வாங்கினர்.

இந்த பற்றுச் சீட்டுகள் வழி முஸ்லிம் சமூகத்தினர் பெருநாள் காலத்தில் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வேய்ன் ஓங் சுன் வேய் குறிப்பிட்டார்.

இந்த 200 வெள்ளி மதிப்புடைய பெருநாள் கால பற்றுச் சீட்டுகளை பி40 பிரிவு மக்களுக்கு உதவும் பொருட்டு சிலாங்கூர் மாநில அரசாங்கம் வழங்கியிருப்பதாக அவர் சொன்னார்.

இத்திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள 56 தொகுதி மக்களுக்காக 7.9 மில்லியன் வெள்ளியை சிலாங்கூர் அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

spot_img

latest articles

explore more