Homeஅரசியல்மசீச இளைஞர் பிரிவு முன்னாள் தலைமைச் செயலாளரின் விலகலால் கட்சிக்கு பாதிப்பில்லை!  -நியோவ் சூ...

மசீச இளைஞர் பிரிவு முன்னாள் தலைமைச் செயலாளரின் விலகலால் கட்சிக்கு பாதிப்பில்லை!  -நியோவ் சூ சியோங்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 26- தனது இளைஞர் பிரிவு முன்னாள் தலைமைச் செயலாளர் அண்மையில் கட்சியை விட்டு விலகி பெர்சத்துவில் இணைந்த தால் கட்சிக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று மசீச இளைஞர் பிரிவின் தகவல் பிரிவு தலைவர் நியோவ் சூ சியோங் தெரிவித்தார்.

மசீச உறுப்பினர்கள் தங்களை மேம்படுத்திக் கொண்டு போராட்டத்தைத் தொடர்வதோடு ஆற்றல்மிக்க புதிய இளைஞர்களைக் கவர்வதற்கு இது  வழிவகுக்கும் என்றார்.

“மசீச அடிமட்ட உறுப்பினர்களைத் தொடர்ந்து அணுகி மக்களின் விருப்பங்களைக் கேட்டறிய வேண்டும். சிறந்த எதிர்காலத்திற்காக ஆக்கப்பூர்வ மாற்றங்களை உருவாக்க வேண்டும் “என்றார் அவர்.

 

spot_img

latest articles

explore more