Homeசமூகம்சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவிட்ட சமய போதகர் ஜம்ரி வினோத் கைது! 

சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவிட்ட சமய போதகர் ஜம்ரி வினோத் கைது! 

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 27-தலைநகர், ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய இடமாற்றம் குறித்து முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவிட்டதற்காக சமய போதகர் ஜம்ரி வினோத் கைது செய்யப்பட்டார்.

பொது அமைதிக்குப் பங்கம் விளைவுக்கும் வகையில் முகநூலில் கருத்தை வெளியிட்ட காரணத்திற்காக ஜம்ரி வினோத் கைது செய்யப்பட்டதாக தேசிய போலிஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின் ஹுசைன் தெரிவித்தார்.

படாங் பெசார் போலிஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இவர் தடுப்புக் காவலில் வைக்க அனுமதி பெறுவதற்கு ஏதுவாக நாளை கங்கார் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்படுவார் என்று கூறப்படுகிறது.

 

 

 

spot_img

latest articles

explore more