Homeசமூகம்மியன்மாருக்கு வெ. 10 லட்சம் உதவி நிதி!  -பிரதமர் தகவல்

மியன்மாருக்கு வெ. 10 லட்சம் உதவி நிதி!  -பிரதமர் தகவல்

கோலாலம்பூர், மார்ச் 30-நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு உதவும் பொருட்டு தொடக்க நிதியாக 10 லட்சம் வெள்ளியை வழங்க அரசாங்க முடிவு செய்திருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

2025 ஆசியான் தலைவர் என்ற தனது கடப்பாட்டை நிறைவேற்றும் வகையில் அடுத்த வாரம் மியன்மாருக்குப் புறப்படும் மனிதநேய குழுவிற்குத் தலைமையேற்கும்படி வெளியுறவு அமைச்சர் டத்தோஶ்ரீ முகமது ஹசானைத் தாம் பணித்திருப்பதாக பிரதமர் சொன்னார் .

“மியன்மாருக்கான இக்குழுவின் வருகை அந்நாட்டில் இன்று தனது பணியைத் தொடங்கியிருக்கும் தேசிய பேரிடர் நிர்வாக குழு( நட்மா) உட்பட தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு ஆதரவு வழங்குவதற்காகவே “ என்று அறிக்கை ஒன்றின் வழி பிரதமர் சுட்டிக் காட்டினார்.

மலேசிய தேசிய பேரிடர் நிர்வாக குழுவைச் சேர்ந்த 50 பேர் மியன்மாரின் தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கைக்குத் தோள் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

spot_img

latest articles

explore more