பெட்டாலிங் ஜெயா, மார்ச் 30-நாட்டில் உள்ள முஸ்லிம் பெருமக்கள் நாளை திங்கட்கிழமை நோன்பு பெருநாளைக் கொண்டாடுவர் என்று அரச முத்திரை காப்பாளர் சைட் டேனியல் சைட் அகமது அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
“ஆட்சியாளர்களின் ஒப்புதலின் பேரில் மாட்சிமை தங்கிய மாமன்னரின் உரையை நிறைவு செய்யும் வகையில் மலேசியா முழுவதும் உள்ள மாநிலங்களில் நாளை மார்ச் 31ஆம் தேதி திங்கட்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என்று இதன் வழி அறிவிக்கின்றேன்” என்றார் அவர்.


