Homeசமூகம்ஆலயங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒருங்கிணைப்பு குழு தேவை!  பிரதமரிடம் மகஜர் சமர்ப்பிப்பு

ஆலயங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒருங்கிணைப்பு குழு தேவை!  பிரதமரிடம் மகஜர் சமர்ப்பிப்பு

கோலாலம்பூர், ஏப். 6-நாட்டிலுள்ள இந்து ஆலயங்கள் எதிர்நோக்கி இருக்கும் நிலப் பிரச்சினை, பதிவு பிரச்சினை மற்றும் நிர்வாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு மலேசிய இந்து சங்கம் இன்று சிறப்பு சந்திப்பு கூட்டம் ஒன்றை நடத்தியது.

ஆலயங்கள் எதிர் நோக்கியிருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஆலயங்கள் ஒருங்கிணைப்பு குழுவை அமைப்பது தொடர்பில் பிரதமர் துறை அமைச்சிடம் சங்கம்  மகஜர் ஒன்றை சமர்ப்பித்தது.

இந்த மகஜரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கனிடம் மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் வழங்கினார்.

தலைநகர், பிரிக்ஃபீல்ட்ஸ் கலா மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 500 கோவில்களின் பிரதிநிதிகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பெரும்பாலான ஆலயங்கள் நிலப் பிரச்சினையை எதிர் நோக்கியிருக்கின்றன. இதனையடுத்து, ஆலய நிர்வாக பிரச்சினையாகும் என்பதை தங்க கணேசன் சுட்டிக் காட்டினார்.

இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட கோவில் பொறுப்பாளர்களில் அதிகமானோர் நிலப் பிரச்சினை குறித்து தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் .

தற்போது நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் திவால் இலாகா கீழ் உள்ளதாக அவர் சொன்னார்.

அதே வேளையில், பல ஆலயங்கள் சட்டப் பிரச்சினையை எதிர்நோக்கி நீதிமன்றத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இவற்றிற்கு எல்லாம் தீர்வு காண ஆலயங்கள் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இதன் வாயிலாக இந்து ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சுமூகமானதொரு தீர்வு காண முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டிலுள்ள 2,500 திற்கு மேற்பட்ட ஆலயங்களில் சுமார் 1,000 அரசாங்க பதிவு பெற்றவை என்று அறியப்படுகிறது.

அதே வேளையில், நிலப்பிரச்சினை காரணமாக 1,500 ஆலயங்கள் பதிவு பெறாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

 

spot_img

latest articles

explore more