Homeசமூகம்டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமையில் சாந்தா காளியப்பனின் ‘விடியல் தூரமில்லை’ நூல் வெளியீடு! 

டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமையில் சாந்தா காளியப்பனின் ‘விடியல் தூரமில்லை’ நூல் வெளியீடு! 

கோலாலம்பூர், ஏப்.6-மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் சாந்தா காளியப்பனின் ‘விடியல் தூரமில்லை’ எனும் சிறுகதை நூல் இன்று தலைநகரில் வெளியீடு கண்டது.

மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமையில் இங்குள்ள பிரிக்பீல்ட்ஸ், பார்வையற்றோர் சங்க மண்டபத்தில் இந்த நூல் அதிகாரப்பூர்வமாக வெளியீடு கண்டது.

ராஜமோகநாதனின் வரவேற்புரையுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் சாந்தா காளியப்பனின் ஆசிரியர் என்னும் வகையில் மன்னர் மன்னன் மருதை ஆசியுரையும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மேனாள் தலைவர் ஞானசைமன் வாழ்த்துரையும் வழங்கினர்.

சிறுவன் ந. சிவேந்திரன் தமிழ்ச்செல்வன் இருவரும் இனிய பாடல்களை வழங்கிய வேளையில்  புஷ்பவாணி நடனப்பள்ளி மாணவிகளின் நடனம் நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டியது.

இந்நிகழ்ச்சியை பொன் கோகிலம் சுவைபட தொகுத்து வழங்கினார்.

சுமார் 40 ஆண்டுகளாக தான் பார்த்த, கேட்ட, அனுபவித்த படிப்பினையைக் கொண்டு ‘விடியில் தூரமில்லை’ என்ற தலைப்பிலான இச்சிறுகதையை படைத்திருக்கிறார் சாந்தா.

தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் மன்றத்தின் தலைவர் எஸ். எஸ். பாண்டியன், தலைமையாசிரியர் அப்பளநாயுடு, எழுத்தாளர்கள் என திரளானோர் இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

 

 

 

spot_img

latest articles

explore more