Homeமலேசியாவர்த்தகப் போரில் மலேசியா சிக்கிக் கொள்ளாமல் இருப்பது அவசியம்!  பிரதமர் அன்வார்

வர்த்தகப் போரில் மலேசியா சிக்கிக் கொள்ளாமல் இருப்பது அவசியம்!  பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், ஏப். 18-சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நிகழ்ந்து கொண்டிருக்கும் வர்த்தகப் போரில் மலேசியா சிக்கிக் கொள்ளாமல் இருப்பது அவசியம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மலேசியா நல்லுறவைப் பேணுவதற்கான தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகப் பேணி வருவதாகவும், எந்தவொரு தரப்பினரும் நாட்டின் மீது அழுத்தம் கொடுக்க அனுமதிக்காது என்றும் அவர் கூறினார்.

மேலும், மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு மக்களின் நலனுக்காகவே உள்ளது.

குறிப்பாக, பொருளாதாரம், வளர்ச்சி மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளும் இன்னும் வலுவாக உள்ளன.

எடுத்துக்காட்டாக, குறைக்கடத்தி ஏற்றுமதியில் 60 சதவீதம் அமெரிக்காவிற்கு செல்கிறது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

“சுதந்திரமாக வர்த்தகம் செய்வதே மலேசியாவின் கொள்கையாகும்” என்றார் அவர்.

“நாங்கள் முதலீட்டை ஊக்குவிக்கிறோம். ஆனால் அது மலேசியாவை சிறிதும் பாதிக்கக்கூடாது”.

ஏனெனில் நாங்கள் ஒரு சுதந்திரமான, மற்றும் இறையாண்மை கொண்ட நாடு என்றும் அன்வார் விவரித்தார் .

 

spot_img

latest articles

explore more