கோலாலம்பூர், ஜூன் 11-
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தென்கிழக்கு ஆசியப் பிரிவின் கீழ் உள்ள தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் சமூக ஊடகப் பிரிவில், மலேசிய விஜய் ரசிகர்கள் சங்கத்தின் (MVF) உறுப்பினர்கள், அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மலேசியாவிலிருந்து புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் பின்வருமாறு:-
திரு. வீரா இளங்கோவன்
திரு. வினோத் தர்ஷன்
திரு. கார்த்திக் சசி கண்ணா
திரு. தினேஷ்வரன் கிருஷ்ணன்
திருமதி. வி. லட்சுமி
திரு. எல்.வி. முகேந்திரன், B.A.
மலேசிய எல்லைகளைக் கடந்து, தளபதி விஜயின் அரசியல் மற்றும் டிஜிட்டல் வெளிப்பாட்டு முயற்சிகளில், MVF குழுவினர் தீவிரமாக பங்களிக்க, இந்நியமனங்கள் அனுமதிக்கிறது.
மலேசியாவைச் சேர்ந்த இளம் தொழில்முறை வல்லுநர்களின் நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் தென்கிழக்காசியாவில் TVK-யின் டிஜிட்டல் செல்வாக்கை வலுப்படுத்த முடியும்.
பிரபல தமிழ் நடிகரும், வளர்ந்து வரும் அரசியல் தலைவருமான தளபதி விஜய் தலைமையிலான TVK, தமிழ்நாட்டுக்கு அப்பால் படிப்படியாக தனது விரிவாக்கத்தை மேற்கொண்டு, உலகளவில் தொழில்நுட்ப ஆர்வமும் சமூகப் பொறுப்பும் கொண்ட இளைஞர்களின் பிணையத்தை உருவாக்க முயல்கிறது.
இந்த முன்னெடுப்பின் மூலம், ஆன்லைன் தளங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமூக ஊடக முயற்சிகள் மூலம் உலகெங்கிலும் உள்ள புலம்பெயர் தமிழர்களுக்கு, கட்சியின் நோக்கத்தை கொண்டுச் செல்லும் முயற்சியாகவும் இது அமைகின்றது.
இதனிடையே, பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களுக்கு, மலேசிய விஜய் ரசிகர்கள் சங்கத்தின் தலைவர் ஷர்மநாத், இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இன்று மலேசிய விஜய் ரசிகர்கள் இயக்கத்திற்கு ஒரு மகத்தான மைல்கல்லாகும். எங்கள் உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் தென்கிழக்கு ஆசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக குழுவில் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டிருப்பது, எங்கள் சங்கத்திற்கு மட்டுமல்லாமல், மலேசியாவில் உள்ள அனைத்து தமிழ் இளைஞர்களுக்கும் பெருமைமிக்க தருணமாகும்.
இது எங்கள் அர்ப்பணிப்பையும், தளபதி விஜயின் அரசியல் பார்வையை உலகளாவிய அளவில் டிஜிட்டல் மூலம் வெளிப்படுத்தும் வாய்ப்பையும் பிரதிபலிக்கிறது. இந்தப் பொறுப்பை நேர்மை, அன்பு மற்றும் அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவோம் என்று ஷர்மநாத் உறுதியளித்தார்.