கோலாலம்பூர், ஜூன் 19-ஈரானிலுள்ள தூதரக பணியாளர்கள் உட்பட மலேசியர்கள் துருக்மெனிஸ்தான் வழியாக தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹாசான் கூறினார்.
இவர்கள் தெஹ்ரானின் வடகிழக்கு பகுதியிலிருந்து நிலவழியாக துருக்மெனிஸ்தான் எல்லைக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
எல்லையிலிருந்து துருக்மெனிஸ்தான் தலைநகர் அஷ்காபாட்டிற்கு இவர்கள் அழைத்துச் செல்லப்படுவர் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இவர்களில் நிரந்த மலேசிய குடியுரிமை பெற்ற ஒருவர், 2 ஈரானிய தம்பதிகள், ஒரு சிங்கை பிரஜை உட்பட மொத்தம் 19 பேர் தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என்றார் முகமது ஹாசான்.
அதே வேளையில், மலேசிய மாணவர்கள் நால்வர் ஈரானில் இருப்பதாகவும் அவர்கள் தாயகம் அழைத்து வரப்பட மாட்டார்கள் என்றும் அமைச்சர் சொன்னார்.


