HomeமலேசியாGEG சட்டமசோதாவை மீண்டும் பரிசீலிக்கும்படி, அரசாங்கத்திற்கு அக்மால் சாலே கோரிக்கை

GEG சட்டமசோதாவை மீண்டும் பரிசீலிக்கும்படி, அரசாங்கத்திற்கு அக்மால் சாலே கோரிக்கை

கோலாலம்பூர், ஜூன் 19-

இளையோர்களிடையே வேப் எனப்படும் மின் சிகரெட்டின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், GEG எனப்படும் புகைப்பிடிக்கும் தலைமுறையை முடிவுக்கு கொண்டுவரும் சட்டமசோதாவை மீண்டும் பரிசீலிக்குமாறு, அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மால் சாலே அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.

மின்சிகரெட் விற்பனையைக் வேப் கட்டுப்படுத்தும் சட்டம் இல்லாததால், அதன் பயன்பாடு பரவலாக உள்ளதாக அவர் கூறினார்.

புகைப்பிடிக்கும் தலைமுறையை முடிவுக்கு கொண்டுவரும் சட்டமசோதா, எதிர்கால தலைமுறையினர் போதைப்பொருள், மின்சிகரெட் ஆகியவற்றுக்கு அடிமையாகும் போக்கை கட்டுப்படுத்த முடியும் உதவும் என்றாரவர்.

GEG சட்டமசோதா, 2007ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் புகையிலை, மின்சிகரெட் உள்ளிட்டவற்றை வாங்கவோ, பயன்படுத்தவோ, உடமையாக வைத்திருக்கவோ தடைவிதிக்கின்றது.

ஆயினும், 2023ஆம் ஆண்டு பொது சுகாதாரத்தை முன்னிறுத்திய புகைக்கும் பொருட்கள் கட்டுப்பாட்டு சட்டமசோதாவில் செய்யப்பட்ட திருத்தம் காரணமாக, அந்த விதி அகற்றப்பட்டது.

GEG சட்ட வரைவில் முரண்பாடும் பாகுபாடும் இருப்பதாகவும், 2007ஆம் ஆண்டு ஜனவரி 1-க்கு முன் பிறந்தவர்களுக்கும் அதற்கு பிறகு பிறந்தவர்களுக்கும் வேவ்வேறான அணுகுமுறை போக்கு உள்ளதாகவும், கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பரில், அப்போதைய சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சாலிஹா முஸ்தாபா நாடாளமன்றத்தில் கூறியிருந்தார்.

GEG சட்டத்தை உருவாக்கியிருந்த முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் அரசின் அம்முடிவு குறித்து வருத்தம் தெரிவித்திருந்தார்.
அச்சட்ட மசோதா பின்னர் 2023ஆம் ஆண்டு மேலவையிலும் அங்கீகரிக்கப்பட்டது.

spot_img

latest articles

explore more