கூச்சிங், ஜூன் 20-
கூச்சிங்கில் காரை ஓட்டிச் சென்ற போது துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய நபர் ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
போலீஸார் அவரை மடக்கிப் பிடித்ததோடு அவரிடமிருந்த கைத் துப்பாக்கியையும் பறிமுதல் செய்ததாக சரவாக் போலீஸ் தலைவர் மன்சா அதா தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட துப்பாக்கியானது விளையாட்டு நிகழ்ச்சிகளில் பயன் படுத்தப்படும் போலி துப்பாக்கி என்றும் சொல்லப்படுகிறது.
அந்த ஓட்டுநரின் குற்றம் நிரூபிக்கப் பட்டால், 5,000 ரிங்கிட் வரையிலான தண்டனை மற்றும் ஒராண்டு சிறை விதிக்க சட்டம் வகை செய்கிறது.


