Homeசமூகம்கேஎல்ஐஏவில் மீண்டும் அதிவேக ரயில் சேவை!

கேஎல்ஐஏவில் மீண்டும் அதிவேக ரயில் சேவை!

கோலாலம்பூர், ஜூன் 22-சிப்பாங் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ)  ஜூலை 1ஆம் தேதி முதல் மீண்டும் அதிவேக ரயில் சேவை தொடங்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு கேஎல்ஐஏ அதிவேக ரயில் சேவையை நிறுத்தியது.  பல்வேறு சோதனைகளுக்குப் பின்னர்  இத்திட்டம்  தற்போது நிறைவடைந்துள்ளதாக அவர் சொன்னார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய அதிவேக ரயில் சேவையில்  அவசரகால தேவை உட்பட இன்னும் பல சோதனைகள் மேற்கொள்ளப்படும்  என்று அமைச்சர் விவரித்தார்.

சோதனை நடவடிக்கைகள் யாவும் முழுமை அடையும் பட்சத்தில் ஜூலை 1ஆம் தேதி தேதி காலை 10 மணிக்கு ரயில் சேவை தொடக்கம் காணும்  என்றார்.

கோலாலம்பூர்  அனைத்துலக விமான நிலையத்தில் மூன்று  ரயில் பெட்டிகள் மூலம் ஒரே நேரத்தில் கூடுதல்பட்சம் 270 பேர் இந்த  அதிவேக ரயிலில் பயணம் செய்யலாம் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.

spot_img

latest articles

explore more