கோலாலம்பூர், ஜூன் 23-லண்டனில் உள்ள மறைந்த முன்னாள் நிதியமைச்சர் துன் டைய்ம் ஜைனுடின் மனைவி நயிமாவின் சொத்துகள் முடக்கத்தைத் தற்காலிகமாக நிறுத்த இங்குள்ள உயர் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) லண்டனில் உள்ள நயிமாவின் £132 மதிப்புள்ள சொத்துகளை முடக்கும்படி உத்தரவு பிறப்பித்தது.
இந்த நீதிமன்ற உத்தரவைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி நயிமா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவரின் மனுவை நீதிபதி அஸார் ஏற்றுக் கொண்டு சொத்து முடக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.


