ஷா ஆலம், ஜூன் 25-
தாமான் ஸ்ரீமூடா பகுதியில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதற்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் அனுப்பும் முறை காரணமல்ல என்று இண்டா வாட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஸ்ரீமூடாவின் ஸோன் 9 பகுதியானது தாழ்ந்த நிலப்பகுதியில் இருப்பதால் நீரோட்டம் விரைவாகச் செல்லவில்லை என்றும் அங்கிருக்கும் கால்வாய்களில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் அது வெள்ளத்தை ஏற்படுத்துவதாக இண்டா வாட்டர் சுட்டிக் காட்டியுள்ளது.
அந்தப் பகுதியில் கால்வாய் கட்டுமானம் 30 ஆண்டுகளுக்கு முன்னால் அப்போதைய தேவைக்கு ஏற்ப நிர்மாணிக்கப்பட்டு கால்வாய்களில் தூர் வாரப் படாமல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நீரானது கால்வாய்களில் மண்டியிருக்கும் செடி கொடிகளினால் விரைவாகச் செல்வதற்குத் தடையாக இருப்பதால் வெள்ளம் ஏற்படுவதாக இண்டா வாட்டர் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
-பொன் முனியாண்டி


