Homeசமூகம்இந்திய மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கு உந்து சக்தியாக விளங்கியவர் தான்ஸ்ரீ தம்பிராஜா!  -டாக்டர் குமரன்

இந்திய மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கு உந்து சக்தியாக விளங்கியவர் தான்ஸ்ரீ தம்பிராஜா!  -டாக்டர் குமரன்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 25-

இந்திய மாணவர்கள் படிக்க வேண்டும். பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்று தன்னம்பிக்கை உரையாற்றி அவர்களை பட்டதாரிகளாக உருவாக்கியவர் தான்ஸ்ரீ டத்தோ எம். தம்பிராஜா என்று தெரிவிக்கப்பட்டது.

இவரின் பேராற்றல்மிக்க  உரை  இந்திய மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கு பெரும் உந்து சக்தியாக விளங்கியுள்ளது. அன்னாரின் மறைவு சமூகத்திற்கு பேரிழப்பாகும் என்று மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் முன்னாள் தலைவர் டாக்டர் எஸ். குமரன் வருணித்தார்.

“1982 ஆம் ஆண்டில் ஸ்ரீ முருகன் நிலையத்தை தான் ஸ்ரீ தம்பிராஜா தொடங்கியபோது நான் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். அவருடன் சேர்ந்து இந்நிலைய மாணவர்களுக்கான பாடக் குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது “ என்றார் .

நாட்டில் நன்னெறி பண்புகளுடன் கூடிய சிறந்த கல்வி நிலையம் ஒன்று நிலைத்து நிற்கிறது என்றால் அது ஸ்ரீ முருகன் நிலையமே என்று நேற்று பெட்டாலிங் ஜெயா ஸ்ரீ முருகன் நிலையத்தில் நடைபெற்ற மறைந்த தான்ஸ்ரீ தம்பிராஜாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டபோது அநேகனிடம் அவர்  விவரித்தார்.

மாணவர், பெற்றோர் மற்றும் சமூகம் எப்போதும் எதிர்பார்க்கும் நிலையமாக ஸ்ரீ முருகன் திகழ்கிறது.

இந்நிலையம் வழி இன்னும் அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்பு இதன் கல்வி குழுவினரால்  ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று மலேசிய தமிழாய்வு நிறுவன தலைவருமான டாக்டர் குமரன் நம்பிக்கை தெரிவித்தார்.

 

spot_img

latest articles

explore more