பினாங்கு, ஜூன் 26-
காரில் நீண்ட நேரம் வைக்கப்பட்ட நெகிழி பாட்டிலுள்ள தண்ணீரைக் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கிறது.
வெப்பத்தால் பாதிக்கப்பட்ட நெகிழி பாட்டில் தண்ணீரில் தீங்கு விளைவிக்கும் நானோ துகள்கள் மற்றும் இரசாயனங்கள் வெளியாகின்றன.
இவை, ஹார்மோன் சமநிலையை பாதித்து, நீண்டகால உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளதாக, அச்சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.
மேலும், பயன்படுத்திய பாட்டிலில் உமிழ்நீர் கலந்து, சூடான சூழலில் பாக்டீரியா வளர்ச்சி துரிதமாகி, வயிற்று வலி மற்றும் செரிமானப் பிரச்சனைகளை உருவாக்கலாம்.
நெகிழி பாட்டில்களுக்கு பதிலாக, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது இன்சுலேட்டட் பாட்டில்களைப் பயன்படுத்தலாம் எனவும் அவர் ஆலோசனை வழங்கினார்.


