கோலாலம்பூர்,ஜூன் 26-
சந்தையில் விற்கப்படும் அரசாங்க நிதியுதவி பெற்ற சமையல் எண்ணெயை, வாழிபாட்டுக்குரிய எண்ணெய் என குறிப்பிட்டு பேராசை பிடித்த வியாபாரிகள் அதன் விலையை 228 விழுக்காட்டு விலை அதிகரிப்பில் விற்று வருவது தெரிய வருகிறது.
அம்மாதிரியான செயலானது துரோகம் என்றும் லிட்டர் ஒன்றுக்கு 2.50 ரிங்கிட்டுக்கு விற்கப்படும் சமையல் எண்ணெயை வழிபாட்டுக்குரிய எண்ணெயாக சின்னத்தை மாற்றி, லிட்டர் ஒன்றுக்கு 8.20 ரிங்கிட் விலையில் விற்பது எவ்விதத்திலும் நியாயமில்லை என்றும் அரசின் நிதியுதவி பெற்ற எண்ணெயை துஷ்பிரயோகம் செய்வது சட்டத்திற்குப் புறம்பான செயலென்றும் பினாங்கு இந்து சங்கம் சாடியுள்ளது.
கடந்த ஜனவரில் ஜொகூரில் நபர் ஒருவர் 5,100 லிட்டர் சமையல் எண்ணெயை வழிபாட்டு எண்ணெயாக விற்றதால் தண்டிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள சங்கம், இது போன்ற நியாயமற்ற செயல்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்தியது.
-பொன் முனியாண்டி


