Homeகுற்றவியல்மாணவிக்கு நேர்ந்த கொடூரம்:நீதியை நிலைநாட்டுவீர் ! டாக்டர் சுரேந்திரன் 

மாணவிக்கு நேர்ந்த கொடூரம்:நீதியை நிலைநாட்டுவீர் ! டாக்டர் சுரேந்திரன் 

சைபர் ஜெயா , ஜூன் 26-

இங்குள்ள பல்கலைக்கழக மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சிலாங்கூர் மாநில பிபிபி வன்மையாகக் கண்டித்துள்ளது.

மனிதாபிமானமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட இக்கொலையை நியாயப்படுத்துவதற்கு இடம் தரலாகாது. சந்தேகப் பேர்வழியை விரைவில் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று சிலாங்கூர் மாநில பிபிபி தலைவர் டாக்டர் எம். சுரேந்திரன்  கோரிக்கை விடுத்தார்.

இக்கொடூர சம்பவம் தொடர்பில் போலீசார் விரிவான மற்றும் நிபுணத்துவ முறையில் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மாணவர் தங்குமிட பகுதியில் அம்மாணவிக்கு நடந்த இந்தக் கொடூரம் சிலாங்கூர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது என்றார் சுரேந்திரன்.

ஃபிசியோதெரப்பி துறை மாணவி மானிஷாபிரியட் காவுரின் கொலை தொடர்பில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகமும் தங்குமிட நிர்வாகமும் பொது மக்கள் குறிப்பாக அம்மாணவியின் குடும்பத்தாருக்கு தக்க விளக்கமளிக்க வேண்டும் என்றும் சுரேந்திரன் வலுப்படுத்தினார்.

உயர் கல்வி கூடங்கள் குறிப்பாக மாணவர் தங்கும் விடுதிகளின் பாதுகாப்பு குறித்து தற்போது கேள்வி எழுந்துள்ளது.

ரகசிய காமிரா, நுழைவு கட்டுப்பாடு மற்றும் பயிற்சி பெற்ற பாதுகாவலர்களை பணியில் அமர்த்துவது உட்பட சிலாங்கூரில் உள்ள அனைத்து மாணவர் தங்கும் விடுதிகளிலும் பாதுகாப்பு அம்சம் மீது அதிகவனம் செலுத்தும்படி மாநில அரசாங்கம், ஊராட்சி மன்றங்கள் மற்றும் உயர்கல்வி நிலையங்களை அவர் கேட்டுக் கொண்டார்.

அதே வேளையில், மாணவியின் குடும்பத்திற்குத் தேவையான சட்ட உதவி, மனோவியல் சேவை, நிதியுதவி போன்றவற்றை மாநில அரசாங்கம் மற்றும் பல்கலைக்கழகம் வழங்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரை செய்தார்.

 

spot_img

latest articles

explore more