Homeமலேசியாபிரதமர் இந்தோவிற்கு அதிகாரப்பூர்வ பயணம்! 

பிரதமர் இந்தோவிற்கு அதிகாரப்பூர்வ பயணம்! 

ஜாகர்த்தா, ஜூன் 27-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தோனேசியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு இன்று ஜாகர்த்தா வந்தடைந்தார்.

பிரதமர் மற்றும் பேராளர்களை ஏற்றியிருந்த விமானம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.00 மணியளவில் ஜாகர்த்தா, ஹாலிம் பெர்டானாகுசுமா விமான நிலையம் வந்தடைந்தது.

அவரை இந்தோனேசிய பிரதமர் பிராபோவோ சுபியாந்தோ வரவேற்றார்.

பிராபோவோவுடனான சந்திப்பில் அன்வார் முக்கிய இரு வழி விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவும் இந்தோனேசியாவும் வியூக ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் வட்டார நிலைத்தன்மையை மேம்படுத்தும் முயற்சிகளிலும் இரு நாடுகளும் கவனம் செலுத்தும் என்று கூறப்படுகிறது.

 

spot_img

latest articles

explore more