பேங்காக், ஜூலை 3-

அரசியல் நெருக்கடியில் சிக்கியிருக்கும்  தாய்லாந்தின்  இடைக்கால பிரதமராக அந்நாட்டின் முன்னாள் தற்காப்பு அமைச்சர் பும்தாம் வெச்சாயாச்சாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பும்தாம் வெச்சாயாச்சாய் (71)  கீழ் செயல்படவிருக்கும் ஆ புதிய அமைச்சர்கள் இன்று வியாழக்கிழமை தாய்லாந்து மன்னர் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது.

பிரதமர் பேதோங்டார்ன் ஷினாவத்ராவிற்கு எதிரான விசாரணை தற்போது  நடைபெற்று வருகிறது.

பேதோங்டார்ன் ஷினாவத்ராவைப் பிரதமர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யும்படி தாய்லாந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இவருக்கு எதிரான  விசாரணை பல மாதங்கள் தொடரலாம் என்று கூறப்படுகிறது.