பெட்டாலிங் ஜெயா, ஜூலை 3-
மலேசிய இந்திய சமூகத்தை பாதிக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தான் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக, பி.கே.ஆர். துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் தெரிவித்தார்.
ஆயினும், அதை பொதுவெளியில் பகிரங்கமாக வெளிப்படுத்தாமல் அமைதியாக செயல்பட்டு வருவதாக, பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான அவர் கூறினார்.
“நீண்ட காலமாக, நான் அமைதியாக பணியாற்றுவதையே தேர்ந்தெடுத்து செயல்பட்டு வருகின்றேன்.
காரணம், தம்மைப் பொறுத்த வரையில், பரபரப்புக்கு முன்னுரிமை அளிப்பதை விட உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறேன்” என குறிப்பிட்டார்.
13ஆவது மலேசிய திட்டத்தில் இந்திய சமூகத்தை உயர்த்துவது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்றது.
அதில், நூருல் இசாவின் உரையை, மகிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ வாசித்தார்.அந்த உரையில் நூருல் இசா அவ்வாறு கூறியிருந்தார்.