Homeமலேசியாநாட்டின் இடைக்கால தலைமை நீதிபதியாக டான்ஸ்ரீ ஹஸ்னா நியமனம்! 

நாட்டின் இடைக்கால தலைமை நீதிபதியாக டான்ஸ்ரீ ஹஸ்னா நியமனம்! 

கோலாலம்பூர்,ஜூலை 3-

மலாயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டான்ஸ்ரீ ஹஸ்னா டத்தோ முகமது ஹாஷிம் நாட்டின் இடைக்கால தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய தலைமை நீதிபதி அடையாளம் காணப்படும் வரை டான்ஸ்ரீ ஹஸ்னா இப்பதவியை வகிப்பார் என்று கூட்டரசு நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அலுவலகம் தெரிவித்தது.

நாட்டின் சட்டத் துறையில் இரண்டாவது உயர்நிலை நீதிபதியாகத் திகழும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் டான்ஸ்ரீ அபாங் இஸ்கந்தர் அபாங் ஹாஷிமும் இவ்வாரம் பணிஓய்வு பெறுவதால் அவரை இடைக்கால தலைமை நீதிபதியாக நியமிக்க இயலாது என்று கூறப்பட்டது.

ஆகையால், இவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் நீதிபதி ஹஸ்னா நாட்டின் இடைக்கால தலைமை நீதிபதியாக செயல்படுவார் என்று நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றின் வழி விவரித்தது.

 

spot_img

latest articles

explore more