கோலாலம்பூர், ஜூலை 4-
தற்போது நடைமுறையில் உள்ள மலேசியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையேயுள்ள தொழிலாளர்களைக் கொண்டுவரும் ஒப்பந்தம் பல பிரச்சினைகளை உள்ளடக்கி இருப்பதால் அம்முறையை மாற்றியமைக்க வேண்டுமென கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ அறிவுறுத்தியுள்ளார்.
அண்மையில், வங்காளதேச புதிய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் அது பற்றிக் கூறுகையில் தற்போதைய நடைமுறை வங்காளதேசத் தொழிலாளர்களுக்குப் பாதகமாக இருப்பதால், இனி மேலும் மலேசியாவிற்கு தொழிலாளர்களை அனுப்புவதற்குத் தடை விதிக்க அரசு உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது வங்காளதேசத் தொழிலாளர்கள் 25, 50 மற்றும் 100 என்ற எண்ணிக்கையில் ஏஜெண்டுகளின் மூலம் கொண்டு வரப்படுவதாகவும் இங்கு வரும் தொழிலாளர்கள் 20லிருந்து 30 ஆயிரம் ரிங்கிட் வரை செலவழித்து, வேலை செய்வதற்கு முன்னரே கடனாளிகளாக வருவதாக சார்லஸ் குறிப்பிட்டார்.
மேலும், அடுத்தாண்டு 40,000 வங்காளதேசிகளைக் நாட்டுக்குக் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
-பொன் முனியாண்டி