கோலாலம்பூர், ஜூலை 4-

தற்போதைய மெட்ரிகுலேஷன் திட்டமானது கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களின் வாழ்வைச் சிதைப்பதாக மசீச தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

அண்மையில் மலாக்கா செயிண்ட் டேவிட் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் இருவர் மெட்ரிகுலேஷன் கல்விக்கு அனுப்பிய விண்ணப்பம் இரண்டு முறை நிராகரிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

கியூ காய் ஸியுவான் மற்றும் வாங் யு ஸே என்ற அந்த இரு மாணவர்கள் 9ஏக்களைப் பெற்று, முறையே 98.99 மற்றும் 99.14 மதிப்பெண்களைப் பெற்றிருந்தபோதும், அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அவர்களிருவரும் புறப்பாட நடவடிக்கைகளில் சிறந்து விளங்கியிருந்ததாகவும் ஐடெக்ஸ் எனும் போட்டி நிகழ்ச்சியில் தங்கப் பதக்கம் வென்றிருப்பதாகவும் தேசிய அறிவியல் மற்றும் கணிதப் போட்டியில் இரண்டாவது நிலையில் வந்திருப்பதாகவும் வீ கா சியோங் சுட்டிக் காட்டினார்.

இந்நிலையில் 9ஏ பெற்ற இம்மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பு புறக்கணிக்கப்படும் செயலானது சிறந்த மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும் அவர் வர்ணித்தார்.

-பொன் முனியாண்டி